சிங்கப்பூர், மலேசியா இடையே பயண விண்ணப்பங்கள் ஆகஸ்டு 10 முதல் சமர்ப்பிக்கலாம்

0

மலேசியாவிற்கும் சிங்கப் பூருக்கும் இடையே பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆகஸ்டு 10லிருந்து சமர்ப்பிக்க லாம் என்று அறிவிக்கப்பட்டி ருக்கிறது.
இந்த அறிவிப்பு இரு நாடு களின் வெளிவிவகார அமைச் சுக்களின் கூட்டறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூலை 26இல் இரு நாட்டின் வெளிவிவகார அமைச்சர்களான டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் இடையில் பாலத்தில் நடந்த சந்திப்புக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
ஆர்.ஜி.எல். எனப்படும் பரிவர்த்தனை கிரிண் லேன் மற்றும் பி.சி.ஏ. எனப்படும் தவணைக் கால போக்குவரத்து ஏற்பாடுகள் முதலிய இரண்டு வழிமுறைகளைப்பற்றி அச் சந்திப்பில் உடன்பாடு காணப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
அச்சந்திப்பை தொடர்ந்து இரு நாட்டு அமைச்சர்களும் ஆர்.ஜி.எல். மற்றும் பி.சி.ஏ. வழிமுறைகளில் உள்ள முக்கிய மான அம்சங்களைப் பற்றி விவா தித்தனர்.
அவ்விவாதத்தின் அடிப்படையில் அதிகாரத்துவ மற்றும் வணிகத்திற்கான பயணங்களின் விதி முறை களும் வழிமுறைகளும் நிர்ணயம் செய்யப்பட்டன.
பயணம் செய்யவிரும்பும் நபர்கள் நிர்ணயிக்கப்பட்ட சட்டவிதி முறைகளுக்கும் பொது சுகாதார விதிமுறைகளுக்கும் உடன்பட வேண்டும்.
அது பற்றிய முழுத் தகவல்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்று அவ்வறிக்கை மேலும் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 5 =