சிங்கப்பூரில் செவிலியருக்கு கடும் தட்டுப்பாடு

சிங்கப்பூரில் இன்னும் கொரோனா தொற்று குறையாத காரணத்தால் அங்கு செவிலியர், மருத்துவர்கள் தேவை அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், செவிலியருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் கவலையில் உள்ளனர். சிங்கப்பூரில் நிலவும் செவிலியர் தட்டுப்பாடு குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது: வெளிநாடுகளில் இருந்து நிறைய செவிலியர்கள் இங்கு வந்து பணிபுரிவது வழக்கம். ஆனால், சிங்கப்பூரில் செவிலியர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவதில்லை. அவர்கள் இங்கு இரண்டாண்டுகள் வேலை செய்துவிட்டு அந்த பணி அனுபவத்தைக் கொண்டு கனடா, வளைகுடா போன்ற நாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர். தேர்ந்த செவிலியர் ஒருவரை தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்த்துவிட்டால், சேர்த்துவிடும் நபருக்கு 12 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு சிங்கப்பூரில் வரலாறு காணாத அளவுக்கு செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டது. 2021ம் ஆண்டு முதல் அரையாண்டில் மட்டுமே 1,500 செவிலியர் ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல் வெளிநாட்டைச் சேர்ந்த 500 மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஆண்டுக்கு 2,000 செவிலியர் ராஜினாமா என்பது இந்த ஆண்டில் 6 மாதங்களிலேயே 1,500ஐ கடந்துவிட்டது. கொரோனா பரவும் நேரத்தில் செவிலியல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலையில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 6 =