சிங்கப்பூரில் உள்ள மலேசியர்களின் நலனில் கவனம் செலுத்துங்கள்

0

சிங்கப்பூரில் கோவிட்-19 வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் அந்த குடியரசில் உள்ள மலேசியர்களின் நலனில் கவனம் செலுத்தும்படி ஜசெக செப்புத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கொக் புத்ராஜெயாவை கேட்டுக் கொண்டார். தாங்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய முடியாது என்ற அச்சத்தின் காரணமாக அங்கு வேலை செய்யும் பெரும்பாலான மலேசியர்கள் நாட்டிற்குத் திரும்ப தயங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த சில நாட்களாக சிங்கபூரில் கோவிட்-19 தொற்று பெரிய எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் மட்டும் அந்த குடியரசில் 1,426 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆயிரக்கணக்கான மலேசியர்கள் அங்கு வேலையின்றியும் முறையான தங்கும் வசதியின்றியும் சிக்கித் தவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆகையால் அந்த குடியரசில் உள்ள மலேசியப் பிரஜைகளின் நலன்களைப் பேணுவது மலேசிய அரசாங்கத்தின் கடமையாகும் என்றார் அவர்.
இதனிடையே சிங்கப்பூரிலேயே தங்கியிருக்கும்படி அங்குள்ள மலேசியர்களை டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசியாவிற்குத் திரும்ப விரும்புவோர் 14 நாட்களுக்குத் தனிமைப் படுத்தப்படுவர் என அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =