சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புவோர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்

வேலை, வர்த்தகம் தொடர்பில் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்குள் வருவோர் இனி தங்களை வீட்டில்
தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.
இதற்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பும் மலேசியர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப் பட்டிருந்தது.
ஆனால் இந்த உத்தரவு ஆணையை புத்ராஜெயா மீட்டுக் கொள்வதாக அடாம் பாபா தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்குள் வருபவர்கள் இனிமேல் தனித்திருக்கும் மையங்களில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஹோட்டல்களில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள, விரும்பும் மலேசியர்கள் அதற்கான செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
ஆகஸ்ட் 29இல் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய 35 வயது ஆடவருக்கு செப்டம்பர் 2ஆம் தேதி கோவிட்-19
தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
மலேசியாவும் சிங்கப்பூரும் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குப் பின்னர் எல்லையைக்
கடக்கும் பயணங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளன.
இதுவரை 3,000 மலேசியர்கள் நாடு திரும்பியிருப்பதாக அவர் சொன்னார்.
மலேசியா-சிங்கப்பூருக்கு தினசரி பயணம் மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகள் குறித்து
இருதரப்பும் பேச்சுவார்த்தை
நடத்தி வருவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 4 =