சிங்கப்பூரிலிருந்து மலேசியா திரும்புபவர்களுக்கு கடுமையான பரிசோதனை

0

சிங்கப்பூரிலிருந்து ஜொகூர்பாருவிற்கு திரும்பும் மலேசியர்கள் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என ஜொகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர்.வித்யானந்தன் கூறினார்.
கடந்த சில தினங்களாக சிங்கப்பூரில் கோவிட்-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதால் ஜொகூர் அரசாங்கம் இந்த முடிவை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரிலிருந்து ஜொகூர்பாருவிற்கு திரும்பும் மலேசியர்களை மாநில சுகாதார மற்றும் குடிநுழைவு இலாகாக்கள் அணுக்கமாக கண்காணித்து வரும் என கஹாங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
ஜொகூர்பாருவிற்குள் நுழையும் மலேசியர்களுக்கு கோவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறிகள் இருந்தால் உடனே அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள் என்றார் அவர்.கோவிட்-19 சோதனையில் அந்த வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இல்லாதவர்கள் உடனே தங்களுடைய வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த விவகாரத்தில் மலேசிய மற்றும் சிங்கப்பூர் அரசாங்கங்கள் அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சிங்கப்பூரில் புதிதாக 942 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டுள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கம் கூறியது.
கடந்த சனிக்கிழமை வரை சிங்கப்பூரில் 5,992 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + eleven =