சிகாமட் ரயில் நிலையம் தற்காலிக நிலையத்தில் செயல்படும்


கிம்மாஸ் – ஜொகூர்பாரு மின்சார இரட்டைத் தண்ட வாள நிர்மாணிப்புப் பணிகள் நடைபெறுவதால், சிகாமட் ரயில் நிலையம் நேற்று உடைக்கப்பட்டு அதே இடத்தில் புதிய ரயில் நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கேடிஎம் பெர்ஹாட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கு மாற்றாக கம்புங் செடாங், ஜாலான் கினுவாங், பெட்ரோனாஸ் எண்ணெய் நிலையத்திற்கு முன்புறம் நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிக ரயில் நிலையத்தில் ரயில் பயணச் சேவைகள் யாவும் வழக்கம் போல் செயல் படும் என்றும் தற்காலிக ரயில் நிலையத்திற்கு பயணிகள் வருவதற்கு கம்புங் பாயா பூலாய், புக்கிட் சிப்புட் சாலையைப் பயன்படுத்தும் படியும் கேடிஎம் பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × two =