சிகரெட் கடத்தல்: மூவர் கைது!

0

புக்கிட் அமானின் பொது பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அமைதி காக்கும் சிறப்பு போலீஸ் படையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் நெகிரி செம்பிலான் மற்றும் கெடாவில் சிகரெட் கடத்தலில் ஈடுபட்டிருந்த மூவரை கைது செய்தனர்.
மூவரில் ஒருவன் மியன்மார் ஆடவன் என புக்கிட் அமானின் கேடிஎன்கேஏ இயக் குனர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மைவி கார் ஒன்றில் சுமார் 24,000 சிகரெட் பாக்கெட்டுகள் இருந்ததைக் கண்டு அது பறிமுதல் செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.
அலோர்ஸ்டாரில் ஹீனோ வகை லோரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது 628,000 சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தது கண்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
நீலாய் நெகிரி செம்பிலான் மற்றும் அலோர்ஸ்டாரில் கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் அனைத்தும் சுமார் 669,440 ஆயிரம் வெள்ளி பெறுமானமுடையது அவை சுங்க வரி செலுத்தப்படாமல் கடத்தப்பட்டவை என்றும் அச்செய்தியாளர் சந்திப்பில் டத்தோஸ்ரீ அக்ரில் சானி தகவல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =