பல்வேறு நிலையிலான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (எம்சிஓ) தொடர்வதற்கு எதிராக மருத்துவ மற்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத் துள்ளனர். எம்சிஓ இவ்வாண்டு இறுதி வரை தொடருமானால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என முன்னாள் சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் கூறினார்.
தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த நடைமுறையை சுகாதார அமைச்சு மறு ஆய்வு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நடப்பில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு புதிய கோவிட் – 19 தொற்றுகள் மற்றும் திரள்களை குறைக்க இயல வில்லை என்றார் அவர்.
புதிய திரள்கள் உருவெடுப் பதை தடுக்க சுகாதார அமைச்சு ஆக்ககரமான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண கூடுதல் நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு எடுக்க வேண்டும். தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண உதவ 1,500 முதல் 2,000 ஊழியர்களை அமைச்சு அமர்த்த வேண்டும் என அவர் பரிந்துரை செய்தார்.
தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பதற்கு ஒரு சிறப்புக் குழுவை சுகாதார அமைச்சு அமைக்க வேண்டும் என டாக்டர் லீ தெரிவித்தார்.
இதனிடையே கோவிட் – 19 தொற்றை கட்டுப்படுத்துவது அனைவரின் கடமையென மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் முனியாண்டி கூறினார்.
குறிப்பாக நிர்ணயிக்கப்பட்ட பணி நெறி முறையை (எஸ்ஓபி) பொது மக்கள் தவறாமல் கடைப் பிடிக்க வேண்டும் என்றார் அவர்.
எஸ்ஓபியை பொது மக்கள் கடுமையாக கடைப்பிடித்தால் கோவிட் – 19 தொற்றை நாம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என அவர் சொன்னார்.
கோவிட் – 19 கட்டுப்படுத்த நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு விதிக்கப்படுவது பெரிய முன்னேற்றத்தைத் தராது என அவர் குறிப்பிட்டார்.
பல மாநிலங்களில் விதிக்கப் பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு இவ்வாண்டு இறுதி வரை தொடரும் என பிரதமர் துரை அமைச்சர் முகமட் ரிட்சுவான் யூசோப் அறிக்கை குறித்து டாக்டர் லீ மற்றும் டாக்டர் சுப்பிரமணியம் மேற் கண்டவாறு கருத்துரைத்தனர்.