சாலை போக்குவரத்து குற்றங்களுக்காக 1,028,387 சம்மன்கள் வெளியிடப்பட்டன

0

கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை சாலை போக்குவரத்து குற்றங்களுக்காக 1,028,387 சம்மன்கள் வெளியிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இலாகா தலைமை இயக்குனர் சமாக்ஷாரி ஹனிபா கூறினார்.
போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை மீறி செல்லுதல், வாகனங்களில் அதிகமான பொருட்களை ஏற்றிச் செல்லுதல், பாதுகாப்பு பட்டை அணியாமல் வாகனத்தை செலுத்துதல் ,தலைக் கவசம் முறையாக அணியாமல் மோட்டார் சைக்கிள்களை செலுத்துதல் போன்ற குற்றங்களுக்காக இந்த சம்மன்கள் வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும் இதே கால கட்டத்தில் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டியதற்காக 275,554 சம்மன்கள் வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த கால கட்டத்தில் 2,500 வாகனங்கள் பரிசோதனை செய்யப்
பட்டதாக அவர் சொன்னார். மேலும் இதே கால கட்டத்தில்
போதைப் பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்தியதற்காக 11 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 14 =