சார்ஜர் போட்டபடி செல்போனை பயன்படுத்திய வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

0

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் தேவேந்திரன் (வயது 27). இவர் பிரபல தனியார் செல்போன் நிறுவனத்தில் டவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று மதியம் தேவேந்திரன் தனது வீட்டில் செல்போனை சார்ஜர் போட்டுக்கொண்டு, அதை பார்த்துக்கொண்டும் இருந்தார். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்து அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தேவேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here