சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு – நாசா வீரர்கள் விண்வெளியில் நடைபயணம்

0

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவை சேர்ந்த கிறிஸ் கஸ்சிடி, ரோபர்ட் பென்கென் உள்ளிட்டோர் அங்கு ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நிக்கல்ஹைட்ரஜன் பேட்டரிகளுக்கு பதிலாக அதிக சக்தி வாய்ந்த லித்தியம் அயன் பேட்டரிகள் மாற்றப்படும் பணி கடந்த 2017ம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது.

இந்த பணியின் போது வீரர்கள் விண்வெளியில் நடைபயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி, அமெரிக்க விண்வெளி வீரர்கள் கிறிஸ் கஸ்சிடி, ரோபர்ட் பென்கென் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் ஆய்வு மையத்தை விட்டு வெளியே வந்து விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்டு பேட்டரிகளை மாற்றினர்.

பேட்டரிகளை மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 4 விண்வெளி நடை பயணங்களில் இது முதலாவது என்றும் அடுத்த விண்வெளி நடைபயணம் வருகிற புதன்கிழமை நடைபெறும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 12 =