சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் நாவல் பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..?

0

சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று ஒளவையார் ஊதி சாப்பிடுவாரே… அதே நாவல் பழம் தான் சர்க்கரை வியாதிகாரர்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.

நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.

இத்தகைய நாவல்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கே பார்க்கலாம்..

  • நாவல் பழத்தின் விதையை பொடி செய்து, அதனை நீரில் கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு குடித்து வரலாம். இது யுனானி மருத்து முறையில் நீரிழிவிற்கு இந்த பழத்தின் விதையைத் தான் முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது.
  • நாவல் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வர, கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
  • மலச்சிக்கல் பிரச்சனைக்கும் இது நல தீர்வாகும். நாவல் பழத்தினால் செய்யப்பட்ட வினிகரை சரிசமமான நீரில் கலந்து கொண்டு, தினமும் இரண்டு முறை குடியுங்கள். இல்லாவிட்டால் நாவல் பழத்தினை உட்கொள்ளுங்கள்.
  • பெண்களுக்கு அல்சர், வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை கோளாறுகள், ரத்தப்போக்கு புற்றுநோய் ஆகியவற்றுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
  • ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரும்புச்சத்தை அதிகரிக்கும்.
  • இதனால் ரத்தத்தின் கடத்தும் தன்மை மாறி இலகுவாகும். உடலில் தங்கியிருக்கும் ரசாயண வேதிப்பொருட்கள் கழிவுகளாக வெளியேறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − one =