சரஸ்வதி தமிழ்ப்பள்ளிக்கு டத்தோஸ்ரீ ஜி.வி.நாயர் 40 கணினிகள் அன்பளிப்பு

0

மற்ற இன பள்ளிகளுக் கிடையே தமிழ்ப்பள்ளிகள் பின்தங்கிப் போய்விடக் கூடாது. நவீன தொழில்நுட்ப உலகில் அவர்களும் ஓர் அங்கத்தினராக இருத்தல் அவசியம் எனும் பொருட்டு தலைநகர் சரஸ்வதி தமிழ்ப்பள்ளிக்கு தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஜி.வி.நாயர் 40 கணினிகளை அன்பளிப்பாக வழங்கினார்.அண்மையில் இப்பள்ளிக் கான இணைக் கட்டட நிதி திரட்டு விழா பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அவர் மேற்கண்ட அறிவிப்பைச் செய்தார்.
35 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பள்ளி முன் வளாகத்தில் நான் ஒரு லோரி ஓட்டுநராகப் பணியாற்றினேன். லோரியை நிறுத்துவதற்கு இடமில்லாமல் பள்ளியின் அருகில்தான் நிறுத்துவேன். ஆனால் இப்போது அதே பள்ளிக்கு பிரமுகர் என்ற முறையில், முதன் முதலாக வருகையளிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் அடைவுநிலை குறித்து எனக்கு முழு விவரம் கிடைக்கப் பெறவில்லை. இருந்த போதிலும் மற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு நிகராக இப்பள்ளி மாணவர்களும் விளங்குவார்கள் என்று நம்பிக்கை கொள்கிறேன்.
தலைமை ஆசிரியர் புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டால், அது நிச்சயம் பள்ளியின் வளர்ச்சிக் காகத் தான் இருக்கும். ஆக பள்ளி நிர்வாகத்தின் அர்ப்பணிப்பு மிக்க புத்தாக்கச் சிந்தனைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் நிறைந்த ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பள்ளியின் கட்டடங்கள் உயர்ந்து நிற்பதைக் காட்டிலும் அதில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் வளர்ச்சி கண்டிருக்க வேண்டும் என்பதே எனது தார்மீக ஆவலாகும்.
நான் பல பள்ளிகளுக்குச் சென்று விட்டு வந்துள்ளேன். அதில் தேசியப் பள்ளிகளும் அடங்கும். தேசியப் பள்ளி
களுக்கு அரசாங்கம் வாரிக் கொடுக் கிறது என்று பலரும் நினைத்து வருகின் றனர். சொல்லப்போனால் தேசியப் பள்ளிகளைக் காட்டிலும் தமிழ்ப்பள்ளிகள் வளர்ச்சி மிக்கனவாகவே உள்ளன. தமிழ்ப் பள்ளிகளை மேலும் செம்மைப்
படுத்த பெற்றோர் தங்கள் பிள்ளை களை இங்கு அனுப்ப வேண்டும். தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகளுக்கு கல்வியுடன் சமயம், நன்னெறியும் போதிக்கப்படுவதை நாம் மறந்து விடக்கூடாது.
இந்தப் பள்ளியில் புதிதாகக் கட்டப்படும் இணைக்கட்டடத்தில் கணினி அறை ஒன்று அமைக்கப் படவிருப்பதாக பள்ளித் தலைமை ஆசிரியர் சீதா தங்கவேலு தமதுரையில் கூறியிருந்தார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தரம் பின்தங்கிவிடக்கூடாது என்பதோடு மட்டுமின்றி நவீன தொழில்நுட்ப வசதியின் மூலமாக தங்களின் கல்வியாற்
றலையும் அவர்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பள்ளிக்கு எனது சார்பில் 40 கணிகளை நான் அன்பளிப்பாக வழங்கு
கிறேன். வருங் காலத்தில் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்று ஜி.வி.நாயர் உறுதி கூறினார். இந்த இணைக் கட்டட கட்டுமானத்திற்கு பள்ளியின் வாரியமும் அதன் தலைவர் ஜேக்சன் பெரேராவும் முழுமூச்சாக இறங்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த இணைக் கட்டடம் கட்டுவது குறித்து முன்னமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தாலும், மாநில கல்வி இலாகாவில் இருந்து அனுமதி கிடைப்பதற்கு சற்று கால தாமதமானது.
இருந்தபோதிலும் தமது தொடர் முயற்சியால் கல்வி இலாகாவின் இந்த அனுமதியைப் பெற்று நிர்மாணிப்பு வேலைகளையும் உடனடியாக ஜேக்சன் பெரேரா தொடங்கியுள்ளார் என்று தலைமையாசிரியர் சீதா தங்கவேலு பாராட்டிப் பேசினார்.
சுமார் 1.1 ஏக்கர் நிலத்தில் உள்ள இப்பள்ளியில் 3 மாடிகள் கொண்ட இந்த இணைக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கீழ்த் தளத்தில் பாலர் பள்ளியும் இரண்டாவது மாடியில் நூல் நிலையமும் மூன்றாவது மாடியில் கணினி அறையும் அமைக்கப்படும்.
இந்த கட்டட நிர்மாணிப்புக்கும் கருவிகள் உள்ளிட்ட அனைத்துத் செலவு
களுமாக சுமார் 550,000 வெள்ளி தேவைப்படுகிறது. நன்கொடை யாளர்கள் மற்றும் நல்லுள்ளங்களின் உதவியோடு அதில் பாதித் தொகையைத் திரட்டி விட்டோம்.
அதே போல் நிர்மாணிப்பு வேலைகளும் 20 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளது. 90 நாட்களுக்குள் ஒட்டுமொத்த வேலைகளும் நிறைவு பெற்று, வரும் ஜூலை மாதம் மாண வர்களின் பயன்பாட்டுக்கு இக்கட்டடம் திறக்கப்படும் என்று பள்ளி வாரியத் தலைவர் ஜேக்சன் தெரிவித்தார்.
புதிய கட்டட திறப்பிற்குப் பின்னர் ஆசிரியர் அறை விரிவாக்கம் செய்யப் படும். அதேபோல் சீனப் பள்ளிகளில் இருப்பது போன்ற திறந்த வெளி மண்டபம் கட்டுவதும் வருங்கால திட்டமாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார். இந்த முயற்சிக்கு நன்கொடை வழங்கி பெரும் ஒத்துழைப்பு வழங்கிய தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஜி.வி.நாயர், முத்துக் கிருஷ்ணன், சந்திரன் சேகர், ஸ்ரீகார்த்திகேசு, பரமசாரதி நாயுடு, நாராயணன் ஏண்டி, தூ, சத்தியசீலன் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும் வாரியத்தின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார். இந்த விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கனகவல்லி ஏரன், துணைத் தலைவர் குமரவேலன் ஆகி யோரும் வற்றாத ஆதரவை நல்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 5 =