சரவாக் தவிர்த்து ஜன.22 முதல் நாடு முழுவதும் எம்சிஓ!

    வரும் ஜனவரி 22ஆம் தேதி முதல் சரவாக் மாநிலம் தவிர்த்து நாடு முழுவதும் எம்சிஓ எனப்படும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப் படுவதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார் கெடா, பேராக், பகாங், திரெங்கானு, பெர்லிஸ், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங் களில் ஜனவரி 22ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணியில் இருந்து பிப்ரவரி 4ஆம் தேதி வரை எம்சிஓ அமல்படுத்தப்படுகிறது. நாட்டில் கோவிட்-19 தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து ஜனவரி 13ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை பினாங்கு, சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான், மலாக்கா, ஜொகூர், சபா ஆகிய மாநிலங்களில் எம்சிஓ அமல்படுத்தப்பட்டுள்ளது. சரவாக்கில் சிபு, செலாங்காவ், கானோவிட் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே கோவிட்-19 தாக்கத்தினால் எம்சிஓ அமலாக்கத்தில் உள்ளது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    17 − 1 =