சரவாக், சபாவைச் சேர்ந்தவர் பிரதமராக முடியாததற்கான காரணம் எதுவும் இல்லை!

0

சரவாக் அல்லது சபாவைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் பிரதமராக முடியாது என்பதற்கான காரணம் எதுவும் இல்லை என சரவாக் பிபிபி கட்சியின் உதவித் தலைவர் டத்தோ அப்துல் கரிம் ரஹ்மான் கூறினார்.
கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் பிரதமரானால், அது மிக மகிழ்ச்சியான விஷயம் என்றார் அவர்.
பக்காத்தான் ஹராப்பான் பிளஸின் பிரதமர் வேட்பாளராக சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டாலை லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் துன் மகாதீர் முன்மொழிந்தது குறித்து அவர் கருத்துரைத்தார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலை இருந்தால், சபா அல்லது சரவாக்கைச் சேர்ந்த ஒருவர் பிரதமராவதைப் பரிசீலிக்க வேண்டும் என சரவாக் சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சருமான அவர் சொன்னார்.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரதமர் முஹிடின் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் ஒரு புதிய பிரதமரைத் தேர்வு செய்யும் நிலை ஏற்படும் என்றார் அவர்.
இந்த நிலையில் சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் அல்லது மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபடிலா யூசோப் அல்லது சரவாக் முதலமைச்சர் டத்தோஸ்ரீ அபாங் ஜொஹாரி பிரதமராவதைத் தாம் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =