சம்பவம் நடந்த இடத்தில் இருந்தது நானே அங்கு ஓம்ஸ் தியாகராஜன் இல்லை டெக்சி மனோ போலீஸ் புகார்!

    ஷா ஆலமில் நகராண்மைக்கழக பணியாளருடன் நடந்த ஒரு வாக்குவாதத்தில் ஈடுபட்டது நான்தான். ஆனால், அதற்கு துளியும் சம்பந்தம் இல்லாத ஓம்ஸ் பா. தியாகராஜன் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று டெக்சி ஓட்டுநர் மனோகரன் (55) என்பவர் போலீஸில் புகார் செய்துள்ளார். அச்சம்பவத்தின் போது பதிவு செய்யப் பட்டுள்ள காணொளி தற்சமயம் வைரலாக பரவி வருவதைக் சுட்டிக் காட்டிய மனோகரன், அந்த நகராண்மைக்கழக பணியாளர் ‘கெல்லிங்’ என்று ஏளனமாக பேசியதால்தான் தாம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவர் விளக்கினார். அந்த காணொளியில், மனோகரன் ‘கெல்லிங் என்று கூறுகிறாயா” ‘கெல்லிங் என்று கூறுகிறாயா” என்று அந்த நகராண்மைக்கழக பணியாளருடன் வாதிடுவதை பார்க்கவும் கேட்கவும் முடிகிறது. அந்நேரத்தில் ஓம்ஸ் பா. தியாக ராஜன் அவ்விடத்திலேயே இல்லை. ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக ஓம்ஸ் பா. தியாகராஜன் மீது அபாண்டமாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. போலீஸ் அச்சம்பவம் தொடர்பாக காட்டிய காணொளியில் என்னை அடையாளம் கண்டுக் கொண்ட ஓம்ஸ் பா தியாகராஜன் அது சம்பந்தமாக என்னை அழைத்து வினவினார். நடந்த விவரத்தை தாம் அவரிடம் விவரித்ததாகவும் மனோகரன் தமது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார் நகராண்மைக்கழக பணியாளர் இனவாதத்தைத் தூண்டியது வேண்டத்தகாத செயல். இதனால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன என்பதால் அவர் மீது போலீஸ் விசாரணை நடத்தி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென்று ஷா ஆலம், செக்ஷன் 9 இல் உள்ள போலீஸ் நிலையத்தில் செய்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளதாக மனோகரன் தெரிவித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து போலிஸார் மனோகரனிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    four − 2 =