சம்பள உதவித் தொகை கிடைக்கவில்லையா? சொக்சோவுடன் தொடர்பு கொள்க!

பெஞ்சானா எனும் அரசின் சம்பள நிதியுதவித் திட்டத்தின் வாயிலாக அவ்வுதவியைப் பெறாம லிருக்கும் முதலாளிகள் நேரடியாக சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
இந்தச் சிரமமான சூழ்நிலையில் முதலாளிகள் ஆட்குறைப்பு செய்யாமல் தொழிலாளிகளைத் தொடர்ந்து வேலையில் வைத்திருப்பதற்காகவே இத்திட்டத்தை அரசு அமல்படுத்தி யுள்ளது.
சில வேளைகளில் விண்ணப்ப பாரங்களில் நிறுவனத்தின் வர்த்தகப் பதிவு எண் தவறாகக் குறிப்பிடுதல், தவறான பொருளகக் கணக்கைக் குறிப்பிடுதல், செயல்படாத பொருளகக் கணக்கைத் தெரிவித்தல், தொடர்பு கொள்ள முடியாத தொலைபேசி எண்களைத் தருதல் போன்ற தவறுகள் இருப்பதால், நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனவே, முதலாளிகள் கிடைக்காத நிதியுதவி சம்பந்தமாக சொக்சோ தலைமை செயல் அதிகாரி ceo@perkeso.gov.my எனும் அகப்பக்கத்திலும் 1-300-22-8000 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம். அல்லது சொக்சோ அலுவலகத்துக்கு நேரடியாக வரலாம்.
இந்த நிதியுதவித் திட்டத்தில் சில விதிமுறைகள் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளன:
தொழிலாளியின் சம்மதத்தின் பேரில் சம்பளக் குறைப்பும், வாராந்திர வேலை நாள்களின் வேலை நேரத்தையும் குறைக்க அனுமதிக்கப்படுகிறது. சம்பளமில்லா விடுப்பில் இருக்கும் தொழிலாளர்களுக்கான சம்பள உதவி நிதியை முதலாளிகள் பெற்றுக் கொள்ளலாம், சுற்றுலாத் துறை மற்றும் மீட்புக்கான நடமாட்டக் கட்டுப்பாடு காலத்தில் தடை விதிக்கப்பட்ட நிறுவனத் தொழிலாளர்கள் நேரடியாக அந்நிதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொக்சோ அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × two =