சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை

0

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத, மதிக்காத பயனீட்டாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஓர் அறிக்கை வழி
கோலலங்காட் மாநகர் மன்றம் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளது.
இங்கு பந்திங் சந்தைக்கு வரும் பொதுமக்களில் சிலர் இன்னமும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க மறுத்து வருகின்றனர். மேலும் முகக் கவசங்களை மறந்து வீட்டிலே வைத்து விட்டு
வந்து விட்டேன் என்று காரணம் சொல்லும் சிலர், இன்று முதல் முகக் கவசங்களை அவசியம் அணிந்து வந்தால் மட்டுமே பந்திங் பெரிய சந்தைக்குள் நுழைய முடியும் என அந்த அறிவிப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =