சமயப்பள்ளி காவலருக்கு ஒரு நாள் சிறை

சமயப்பள்ளியில் பணிபுரியும் 36 வயதுடைய காவலர் ஒருவர் கையூட்டு வாங்கியதால் 8000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டு ஒரு நாள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார். முகமது ரோசி எனும் இவர் பாகான் டத்தோ சமயப் பள்ளியில் காவலராக பணிபுரிபவராவார். 2017 – ஆம் ஆண்டு இவர் சமையல் குத்தகைக்காரரிடம் 5800 வெள்ளி கையூட்டாக பெற்றதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் பொழுது நீதிபதி இந்திரா நேரு சவுண்டியா முன்பு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அஹ்மத் தர்மிஜி ஆரிப் என்பவரிடமிருந்து கடந்த ஜூலை 31, 2017 -ஆம் ஆண்டு மேபேங்க் வங்கிக்கணக்கு மூலமாக பணம் பெற்றுள்ளார். சமையல் குத்தகைக்காரர், உணவு சேவை கட்டணத்தில் எந்தவொரு கழிவையும் செய்ய வேண்டாம் என்று கூறி அப்பணத்தை கையூட்டாக கொடுத்துள்ளார். ஆகவே, அவர் செக்சன் 165 சட்டத்தின் கீழ் அரசாங்க ஊழியராக இருந்து மதிப்புள்ள பொருள் அல்லது கையூட்டை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். மேலே குறிப்பிட்டுள்ள செக்ஷனின் கீழ் இருப்பது, இரண்டு ஆண்டிற்கு குறைவான சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்து வகை செய்யும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதாகும். இறுதியாக, நீதிபதி அவருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை மட்டும் 8000 வெள்ளி அபராதம் விதித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மஜியா மேன்சர் ஆஜரானார். முகமது ரோசிக்கு யாரும் ஆஜராகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + twelve =