சபா முதலமைச்சர் அலுவலகத்தில் இரண்டு எம்.ஏ.சி.சி. அதிகாரிகளுக்கு பதவி

ஊழலை தடுப்பதற்காக சபா மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் இரண்டு உயர் பதவிகளை உருவாக்கியிருப்பதாக அதன் முதலமைச்சர் ஷாபி அப்டால் நேற்று அறிவித்தார்.
ஒப்பந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட அப்பதவிகளை நிரப்ப மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) அதிகாரிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.
தாங்கள் ஊழல் நடவடிக் கைகளில் ஈடுபடாதவரை பதவியில் அமரவிருக்கும் எம்.ஏ.சி.சி. அதிகாரிகளைப் பற்றி முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று ஷாபி அப்டால் கூறினார்.
உலக ஊழல் எதிர்ப்பு தினத்தை யொட்டி மாநில மற்றும் சபாவில் பணிபுரியும் மத்திய அரசாங்க ஊழியர்களிடையே முதலமைச்சர் ஷாபி உரையாற் றினார். கடந்த செப்டம்பர் மாதம் எம்.ஏ.சி.சியின் தலைமை ஆணையர் லத்திபா கோயா சபா முதலமைச்சர் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்டார். அவ்வருகையைத் தொடர்ந்து இந்த இரண்டு பதவியும் உருவாக்கப்பட்டது.
மற்ற மாநில அமைச்சுகளிலும் அத்தகைய பதவிகள் ஏற்படுத்தப்படும். குறிப்பாக ஊழல் நடப்பதற்கு சாத்தியம் உள்ள மாநில அமைச்சுகளில் அப்பதவிகள் முதலில் உருவாக்கப்படும் என்று ஷாபி கூறினார்.
மாநில அமைச்சுகளிலும் மற்ற நிறுவனங்களிலும் 21,000 அரசாங்க ஊழியர்கள் சபா மாநிலத்தில் பணியாற்றி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =