சபா மக்கள் ஷாபி அப்டாலுக்கு ஆதரவு வழங்க வேண்டும்!

வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் வாரிசான் தலைவர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டாலுக்கு ஆதரவளிக்கும்படி சபா மக்களை பக்காத்தான் ஹராப்பான் கேட்டுக் கொண்டது. முதலமைச்சர் ஷாபி அப்டாலுக்கு பக்காத்தான் ஹராப்பான் தமது பிளவுபடாத ஆதரவை வழங்கி வரும் என பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங், அமானா தலைவர் முகமட் சாபு ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றில் கூறினர்.
வாரிசான் அரசாங்கத்தின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி மாநில அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்ற முன்னாள் முதலமைச்சர் மூசா அமானை அவர்கள் கடுமையாகச் சாடினர்.
கோவிட்-19 வைரஸ் தாக்கத்தை முறியடிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் போது இந்தத் தரப்பினர் பொறுப்பற்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
பதவி, அதிகார ஆசைக்காக பொதுமக்களின் நலன்களுக்கு இந்தத் தரப்பினர் முன்னுரிமை வழங்கவில்லை என கூட்டறிக்கையில் அவர்கள் தெரிவித்தனர்.
ஆகையால் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஷாபி அப்டாலுக்கும் அவரது பங்காளிக் கட்சிகளுக்கும் சபா மக்கள் வற்றாத ஆதரவை வழங்க வேண்டும் என கூட்டறிக்கையில் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =