சபா மக்களை பிளவு படுத்தாதீர்?

சபா மக்களை பிளவுப்படுத்த எதிர்கட்சிகள் சதிநாச வேலை களில் ஈடுபட்டு வருவதாக சபா பாராமரிப்பு முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் சாடினார்.இம்மாநில மக்களை பிளவு படுத்த குறிப்பாக பிசிஎஸ் கட்சி இன, மத விவகாரங் களில் பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தாம் பாஜாவ் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தம்மை கள்ளக் குடியேறி என பிசிஎஸ் கட்சி குற்றம் சாட்டி வருவதாக செம்பூர்ணா நாடாளுமன்ற உறுப் பினருமான அவர் சொன்னார்.
‘பாஜாவ் சமூகத்தினர் சபா வின் பூர்வீக குடியைச் சேர்ந்த வர்கள். நான் செம்பூர்ணாவில் பிறந்தேன். எனது பாட்டி செம்பூர்ணாவில் புதைக்கப் பட்டார்’.
‘எனக்கு சீனப் பேரப்பிள்ளை கள் உண்டு. காரணம் எனது மகன் சராவைச் சேர்ந்த ஒரு சீன மெலானாவ் பெண்ணை திருமணம் செய்துள்ளார்’ என அவர் சொன்னார். சபா மாநிலத்தில் அனைத்து இனத்தவர்களுக்கும் சமமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் எதிர்க் கட்சிகள் மக்களை பிளவுப்படுத் தும் அரசியலை நடத்தி வருவ தாக ஷாபி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + five =