சபா பிரச்சினையில் தலையிடும் ஹிஷாமுடின் பதவி விலக வேண்டும்

0

சபா பிரச்சினையில் தலையிட்டு மலேசியாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த முயலும் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேய்ன் பதவி விலக வேண்டுமென்று முன்னாள் தற்காப்புத் துணையமைச்சர் லியூ சின் தோங் கேட்டுக் கொண்டார்.
பிலிப்பைன்ஸ் அரசியல்வாதிகள் சிலர் சபாவின் மீது உரிமை கோருவதை சபா இடைக்கால முதலமைச்சர் ஷாபிஅப்டால் கண்டு கொள்ளாமல் இருப்பதாக ஹிஷாமுடின் குற்றம் சாட்டியிருந்தார்.
சபாவின் தேர்தல் நெருங்கும் வேளையில், அதனை ஒரு அரசியலாக்கும் விதத்தில் ஹிஷாமுடின் அதனைப் பயன்படுத்தி ஷாபியின் பெயருக்குக் களங்கத்தை உருவாக்க எத்தனிப்பதாக
லியூ குற்றம் சாட்டினார்.
ஹிஷாமுடின் பொய்யான குற்றச்சாட்டைக் கூறி, அரசியல் ஆதாயம் தேடுகிறார், அவர் நஜிப் ரசாக்கின் போக்கினைப் பின்பற்றியே ஷாபியின் மீது குற்றம் சாட்டுகிறார்.
மலேசியா அவ்விவகாரத்தில் பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது போலவே,
ஷாபியும் இருப்பதால்
அதனைக் குறை
சொல்வதற்கு எதுவும் இல்லையென்று லியூ சுட்டிக் காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − eight =