சபா தேர்தல் வெற்றியாளர் யார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை

சபா மாநிலத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் இரு பெரிய கூட்டணிகளுக்கும் வெற்றி பெறும் வாய்ப்புகள் சரி சமமாக இருக்கின்றன என்று தி மலேசியா இன்சைட் மேற் கொண்ட ஆய்வு கூறுகிறது.
இரண்டு கூட்டணிகளுக்கு மிடையே பலமும் மற்றும் பலவீனமும் இருப்பதால் வெற்றியடையும் வாய்ப்பு இருபிரிவினருக்கும் இருப்பதாக அவ்வாய்வு கூறுகிறது.
அதே சமயத்தில் தலைவர் களாக செல்வாக்குமிக்கவர் களைக் கொண்ட சபா கட்சி களும் மாநிலத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
இவர் களால் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய வாக்குகளை இழக்கக்கூடும் என்று இரண்டு பெரிய கூட்டணிக் கட்சிகளும் கவலையை வெளியிட்டி ருக்கின்றன.
ஆட்சியை தற்காத்துக் கொள் ளும் வாரிசான் பிளஸில் பார்ட்டி வாரிசான் சபா, பிகேஆர், ஜசெக மற்றும் உப்கோ முதலிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
மற்றொரு பெரிய கூட்டணி யான கபோங்கான் ராக்யாட் சபாவில் (ஜிஆர்எஸ்) சபா தேசிய முன்னணி, பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் பிபிஎஸ் முதலியவை உறுப்புக்கட்சி களாக இருக்கின்றன.
தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக் கப்பட்டு 9 நாள்கள் முடிந்துவிட்ட நிலையில் சபா வாழ் மக்கள் தேர்வு செய்வதற்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக் கின்றன என்று தி மலேசிய இன்சைட் ஆய்வு கூறுகிறது.
தனது சேவையை மக்க ளுக்கு சரி சமமாக முழுமையாக வழங்காமல் 26 மாதங்கள் மாநிலத்தை ஆட்சி செய்த வாரிசான் பிளஸுக்கு மறுபடியும் வாய்ப்பு அளிப்பது. இதனால் அக்கூட்டணி தனது தவணைக் காலத்தை பூர்த்தி செய்ய இயலும்.
தீப கற்ப மலேசியாவிலிருந்து உத்தரவுகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் கபோங்கான் ராக்யாட் சபாவிற்கு (ஜிஆர்எஸ்) வாக்குகளை அளித்து மாநிலத்தை ஆட்சி செய்ய வாய்ப்பளிப்பது கோவிட் -19இன் தாக்கத்தால் வெகுவாக பாதிக் கப்பட்ட சபாவின் பொருளா தாரத்திற்கு தேவையான நிதி உதவியை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு இத்தேர்வு வழிவகுக்கும்.
மூன்றாவது வழிமுறை பல குறைகள் உடைய இரண்டு பெரிய கூட்டணிகளையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு சபாவில் தோற்றுவிக்கப்பட்ட கட்சி களுக்கு ஆதரவு அளிப்பது இக்கட்சிகள் சபா மாநிலத் தலைவர்களான அனிபா அமான், பென்டிகார் அமின் மூலியா மற்றும் சோங் கா கியாட் போன்றவர்களால் வழி நடத்தப் படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
அனைத்து 73 தொகுதி களிலும் வாரிசான் பிளஸ் மற்றும் ஜிஆர்எஸ் போட்டி போடு கின்றன. பெரிய கூட்டணிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முர மாக ஈடுபட்டுக் கொண்டிருக் கின்றன.
இந்த ஆய்வின் தொடர்பாக 25 வாக்காளர்களை தி மலேசியன் இன்சைட் பேட்டி கண்டது. அவர்கள் சபா மாநிலத்தின் பல பகுதிகளில் இருக்கின்றனர்.
பேட்டியளித்தவர்களில் பலர் வாரிசான் பிளஸ் 26 மாத கால ஆட்சி பற்றி அதிருப்தி வெளி யிட்டனர். மாநிலத்திலுள்ள ஊராட்சி மன்றங்களும் மாநில அரசாங்கம் நிதி உதவிகளை சரி சமமாக வழங்கவில்லை என்று அவர்கள் குற்றஞ் சாட்டினார்.
மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் (யூடிஎம்) சேர்ந்த டாக்டர் மஸ்லான் அலி, சபா தேர்தல் பற்றி ஆய்வு செய் வதற்கு மாநிலம் முழுவதிலும் பயணங்களை மேற்கொண்டி ருக்கிறார்.
இரண்டு கூட்டணிகளுக்கும் நேர்மறையான மற்றும் எதிர்மறை யான கூறுகள் சரி சமமாக இருக்கின்றன.
எனவே கடைசி நேரத்தில் அவ்விரண்டு கூட்டணிகளும் மேற்கொள்ள விருக்கும் யுக்திகளைப் பொறுத்தே அவர்களின் வெற்றி, தோல்வியைப் பற்றி நிர்ணயிக்க முடியும் என்று டாக்டர் மஸ்லான் கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =