சபா சரவாக் உள்பட 64 மலேசியா திரைஅரங்குகளில் ’புலனாய்வு திரைப்படம் நாளை வெளியீடு!

0

’புலனாய்வு திரைப்படம், நாளை நவம்பர் 14-ஆம் தேதி முதல் மலேசியா முழுவதும் உள்ள 64 திரை அரங்குகளில் வெளியீடு காண்கிறது.
சபாவில் சண்டக்காண் லோட்டஸ் திரை அரங்கிலும், சரவாக்கில் எம்.எம்.சி ரிவர் சைட் திரை அரங்கிலும் வெளியீடு காணும் ’புலனாய்வு திரைப்படம் ஏற்கெனவே பல எதிர்பார்ப்புகளை படத்தின் இயக்குநர் ஷாலினி பாலசுந்தரம் காணொளிகள் வாயிலாகவும், பல பேட்டிகள் மூலமாக
வும் ஏற்படுத்தி உள்ளார்.
படத்தின் தயாரிப்பாளரும் பிரபல பாடகியுமான டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர் இப்படத்தில் மாறுபட்ட கோணத்தில் நடித்திருப்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படத்தில் ஷாலினியுடன் இணைந்து சதீஸ் புதிய இயக்குநராக அறிமுகம் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 11.11.2019இல் பத்திரிகை
யாளர்களுக்கான முன்னோட்ட காட்சியாக திரையிடப்பட்ட ’புலனாய்வு என்ற படத் தலைப் பிற்கு ஏற்ப விறுவிறுப்பான கதையம்
சத்துடனும் காட்சியமைப்புகளுடனும் அனைத்து தரப்பினரும் பார்த்து பாராட்டும் வண்ணம் தயாரிக்கப்பட் டுள்ள இப்படத்தில் கீர்த்தனா, ஷாலினி,
ஷைலா நாயர் ஆகிய மூன்று பெண்களி டம் மாட்டித் தவிக்கும் நாயகனாக கபில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.
சதீஸ் இயக்கியுள்ள முதல் படம் ’புலனாய்வு இந்த ஆய்வை அவர் தன் மனைவியுடன் இணைந்து செய்துள்ளார். அதோடு தன் மனைவியையும் இப்படத்தில் அவர் இயக்கி உள்ளார். படத்தைத் திரையில் பார்த்து உள்ளூர்க் கலைஞர்களுக்கு ஆதரவு வழங்குவோம். நம்மை மகிழ்விக்கும் அளவிற்குப் படம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − two =