சபாவில் வழக்கத்துக்கு மாறான முறையில் தேர்தல்

சபாவில் 73 சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடப்பது நாட்டின் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று கெராக்கான் தலைவர் தலைவர் டாக்டர் டோமினிக் லாவ் தெரிவித்தார்.
கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போது, சபாவில் 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 252 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தேர் தலில் 73 தொகுதிகளுக்கு 447 வேட்பாளர்கள் போட்டியிடுவதோடு, 56 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் குதித்துள்ளனர். ஒரு தொகுதிக்கு சராசரியாக 6.6 வேட்பளர்கள் போட்டியிடுவதாகக் கணிக்கப் படுகிறது. கடந்த பொதுத்தேர்தலில் சபாவில் ஒரு தொகுதியில் 3லிருந்து 6 வேட்பாளர்கள் வரை போட்டியிட்ட வேளையில், இம்முறை 73 தொகுதிகளுக்கு 16 கட்சிகளைச் சேர்ந்த 391 வேட்பாளர்களும் 56 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இம்முறை 13 புதிய தொகுதிகள் உருவாக்கப் பட்டுள்ளன.
பெரிக்காத்தான் நேஷனலில் கெராக்கான் இணைவதா என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று டோமினிக் லாவ் தெரிவித்தார். இதனிடையே, பெரிக்காத்தான் நேஷனலில் கெராக்கான்உறுப்பியம் பெற அக்கட்சியின் அனைத்துச் செயலவை உறுப்பினர்களும் ஒருமனதாகச் சம்மதித்துள்ளதாக மே மாதம் செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 3 =