சபாவில் நுழைவாயில்கள் தீவிரமாகக் கண்காணிப்பு

சபா மாநிலத் தேர்தல் நடைபெறவிருக்கும் இச்சமயத்தில் நாட்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறும் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக குறுக்கு வழிகள் உட்பட அம்மாநிலத்தின் அனைத்து நுழைவாயில்களில் அரச மலேசிய போலீஸ் படை பாதுகாப்பை பலப் படுத்தவிருக்கிறது.
அம்மாநிலத்தினுள் சட்டவிரோதமாக அதிக அளவில் ஆட்கள் நுழைய விருப்பதாக தமது தரப்பிற்கு தகவல் கிடைத் திருப்பதாக சபா மாநில போலீஸ் ஆணையர் டத்தோ ஹசானி கசாலி தெரிவித்திருக்கிறார்.
ஆயினும், இச்சம்பவம் நிகழ்வதைத் தவிர்ப்பதில் தமது தரப்பு தயார் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிடார்.
இந்த தேர்தலை முன்னிட்டு, அண்டை நாட்டில் இருந்து அதிகமானோர் சபாவிற்குள் நுழையவிருப்பதாகவும் குழப்பத்தை ஏற்படுத்த திட்ட மிட்டிருப்பதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இத்தேர்தல் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய நாங்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.
பொது அமைதியையும் பாதுகாப்பையும் நிலைகுலைய விடமாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.
சபாவின் கிழக்குக் கரை மற்றும் கலிமந்தான் ஆகிய எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட போலீசாருக்கும் ராணுவத்தினருக்கும் உத்தரவிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சபா, கோத்தா கினபாலுவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓப்ஸ் பெந்தேங் மற்றும் சட்டமன்றத் தேர்தல் குறித்த சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 18 =