சபாவில் அம்னோ உச்சமன்ற உறுப்பினருக்கு கோவிட்-19 தொற்று

இங்கு சிப்பித்தாங் சட்ட மன்றத் தொகுதியில் பிரசாரத் தில் ஈடுபட்டிருந்தபோது அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமட் ரஸ்லான் ரபிக்கு கோவிட்-19 தொற்று கண்டதாக சுவாரா தொலைக்காட்சி கூறியது.
தற்போது கோத்தாகினபாலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரஸ்லான் ரபி சிகிச்சை பெற்று வருகிறார்.
ரஸ்லானுக்கு நெருக்கமானவர்கள் கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இருப்பினும் இந்த விவகாரம் குறித்து தமக்கு அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
முகமட் ரஸ்லானுக்கு கோவிட்-19 தொற்று உறுதியானால், அவர் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு முழுமையாகக் குணமடைந்த பின்பே தீபகற்ப மலேசியாவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார் என்றார் அவர்.
இதன் காரணமாகத்தான் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட பணி நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தாம் தொடர்ந்து கூறிவருவதாக இஸ்மாயில்
சப்ரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =