சபாவிற்கு அதிகம் வருகை புரிந்த பிரதமர் நான் தான்

அதிகாரத்தில் இருந்த போது இதர பிரதமர்களைவிட சபா விற்கு அதிகம் வருகை புரிந்த பிரதமர் தாம் என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறினார்.
சபா தமக்கு அணுக்கமான மாநிலம் என்பதால் எதிர்வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி கூட்டணி வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சபா மக்கள் சக்தி கட்சி ஏற்பாடு செய்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் முன்னாள் தேசிய முன்னணி தலைவரு மான அவர் சொன்னார்.
வரும் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால் தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் தாம் தொடங்கிய அனைத்து மேம் பாட்டுத் திட்டங்களும் மீண்டும் தொடரப்படும் என்றார் அவர்.
தாம் பிரதமராக இருந்த 9 ஆண்டுகளில் சபாவிற்கு அதிகம் வருகை புரிந்ததோடு பல மேம்பாட்டுத் திட்டங்களை கொண்டு வந்ததாக அவர் சொன்னார்.
இதனிடையே வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் மாநிலத் திலுள்ள இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு பிளவுபடாத ஆதரவை வழங்க வேண்டும் என மலேசிய மக்கள் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் வலியுறுத்தினார்.
தேசிய முன்னணி இந்திய சமூகத்திற்கு அதிக வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட் டார்.
இதனிடையே சபாவிலுள்ள இந்தியர்கள் தேசிய முன்னணி வேட்பாளருக்கு நிச்சயம் வாக் களிப்பர் என சபா மக்கள் கட்சி தலைவர் டத்தோ நாகராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.
சபாவிலுள்ள இந்தியர்கள் தேசிய முன்னணி கூட்டணி யின் மீது நம்பிக்கை வைத் துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 6 =