சபாநாயகர், துணை சபாநாயகரை நீக்கம் செய்யாதீர்

நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் அரிப் யூசோப், துணை சபாநாயகர் ஙா கோர் மிங் ஆகிய இருவரை பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நீக்கம் செய்யக் கூடாது என பக்காத்தான் ஹராப்பான் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2018 பொதுத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் கட்சியில் இருந்து ஓய்வுபெற்ற அரிப், நாடாளுமன்ற ஜனநாயகம் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்தியுள்ளார் என பக்காத்தான் ஹராப்பான் அறிக்கை ஒன்றில் கூறியது. அரிப், ஙா கோர் மிங் ஆகியோர் தங்கள் பதவியில் தொடர்ந்து நீடிக்க பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையான ஆதரவை வழங்கி வருவர் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
சபாநாயகர், துணை சபாநாயகர் நீக்கப்படும் முயற்சியை பக்காத்தான் ஹராப்பான் எம்பிக்கள் எதிர்ப்பர் என அந்த அறிக்கை தெரிவித்தது.
பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், அமானா உதவித் தலைவர் டாக்டர் ஹத்தா ரம்லி, ஜசெக அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக் ஆகியோர் இந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அரிப், ஙா கோர் மிங் ஆரியோரை மாற்ற மே 18ஆம் தேதி மாலை முஹிடின் தீர்மானம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + twelve =