சபாநாயகரை நீக்கும் தீர்மானத்தில் எம்பிகள் சிந்தித்துச் செயல்பட வேண்டும்

0

ஜூலை 13ஆம் தேதி கூடவிருக்கும் நாடாளுமன்ற அவையில் சபாநாயகரை நீக்கும் தீர்மானம் விவாதத்துக்கு வரும்போது, அதனை தீர சிந்தித்து சரியான முடிவுக்கு வந்த பின்னர் வாக்களிக்க வேண்டுமென்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ மக்களவை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். சபாநாயகரை நீக்கும் தீர்மானத்தைத் தாக்கல் செய்ய பிரதமருக்கு முழு அதிகாரமும் உள்ளதாகச் சிலர் கூறும் வேளையில், சிலர் அந்த அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உரியது என்று கருத்துரைக்கின்றனர்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் முஹிடினுக்கு நம்பிக்கை இருந் திருந்தால், அவர் மேற்கண்ட தீர் மானத்தைத் தாக்கல் செய்திருக்க மாட்டார்.
அவரின் நோக்கமே தாம் வகிக்கும் நாட்டின் மேல்மட்டப் பதவியைத் தற்காப்பதில்தான் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மைய காலமாக அரசு சில விவகாரங்களில் தனது அதிகாரத்தை மீறி நடந்து கொள்
கிறது. அகதிகளை விரட்டியடித்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஹன்னா இயோவின் மீது போலீஸ்
விசாரணையை முடுக்கிவிட்ட தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சபாநாயகர் முகமட் அரிஃப்
நேர்மையாக, சுதந்திர மாக, பாரபட்ச
மில்லாமல் செயல்படுவதை எல்லோரும் உணர்ந்துள்ளோம். அவர் யாருடையே நெருக்குதலுக்
கும் அடிபணிந்து நடந்து கொள் ளாமல், எதிர்க்கட்சியினருக்கும் தகுந்த மரியாதையை வழங்கக் கூடியவர்.
மேலும், நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பதால், நாடு அடையும் நற்பயனையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தெரிவுக் குழுக்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை.
நாடாளுமன்ற குழுவில் அனைத்து சமூக ஆர்வல அமைப்பு
களைச் சேர்த்துக் கொண்டது அவரின் புதுமையான அணுகுமுறை யாகும்.
சபாநாயகரை மாற்ற முஹிடின் முனைப்பு காட்டினாலும், அதனை தீர்மானிப்பது நாடாளுமன்றத்தின் கைகளில்தான் உள்ளது.
ஜனநாயகத்தைக் கட்டிக்
காக்கும் பொறுப்பு நாடாளுமன்றத் துக்கே உண்டு. மக்களின் குரலாக அது ஒலிக்கப்பட வேண்டும். அது மக்கள் பிரதிநிதிகளின் மூலம் மக்களைப் பிரதிநிதிக்கிறது.
இதனிடையே, சபாநாயகரை நீக்க வேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டுமென்று கூறி, இணையதள வாக்கெடுப்பு ஒன்றை பெர்சே இயக்கம் தொடக்கியுள்ளது.
அரசின் தன்மூப்பான செயல்களைத் தடுக்க, சபாநாய கருக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப் பில் ஆளும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்
பினர்கள் தீர சிந்தித்து செயல்பட வேண்டுமென்று சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =