சபாநாயகரையும் துணை சபாநாயகரையும் மாற்றத் தேவையில்லை -ஜசெக கோரிக்கை

0

மக்களவை சபாநாயகரையும் துணை சபாநாயகரையும் நீக்குவதை தாங்கள் எதிர்ப்பதாக ஜசெகவின் மத்திய செயலவை அறிவித்துள்ளது.
அமானாவைச் சேர்ந்த சபாநாயகர் டான்ஸ்ரீ முகமட் அரிஃப் மாட் யூசோப்பையும் ஜசெகவைச் சேர்ந்த துணை சபாநாயகர் ஙா கோர் மிங்கையும் அப்பதவிகளில் தொடர்ந்து இருக்க தங்களின் மத்திய செயலவை ஒருமனதாகத் தீர்மானத்தை இயற்றி இருப்பதாக அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
அவர்களிருவரையும் நீக்க கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் முஹிடின் யாசின், தீர்மானத்தை சபாநாயகரிடம் தாக்கல் செய்திருந்தார்.
தமது பதவியைத் தற்காத்துக் கொள்ளவும், தமது உறுப்புக் கட்சிகளின் ஆதரவைப் பெறவும் முஹிடின் தமது சூழ்ச்சித் தந்திரத்தைக் காட்டுவதாக அவரது எதிரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தமக்கு எதிராகத் துன் மகாதீர் தாக்கல் செய்திருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தடுக்கும் பொருட்டு, முஹிடின் மக்களவையின் ஒரு நாள் கூட்டத்தை, பேரரசரின் உரைக்குப் பின்னர் ஒத்திவைத்தார். அவையை ஒத்தி வைக்க அவர் கோவிட்-19 நோய்ப் பிரச்சினையை காரணம் காட்டி நாடகமாடினார்.
இவ்வேளையில், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற அம்னோ, பாஸ் கட்சியோடு இணைந்து திடீர் தேர்தலை நடத்த வேண்டுமென்ற முனைப்பைக் காட்டி வருகிறது.
அம்னோ, பாஸ், காபுங்கான் பார்ட்டி சரவாக், முஹிடினின் பெர்சத்து ஆகியவை இணைந்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கிறது.
திடீர் தேர்தல் நடத்தப்பட்டால், பெர்சத்து கட்சி கடுமையாகத் தோல்வியுறும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அரிஃப்பையும் ஙாவையும் அகற்றுவதன் மூலம் முஹிடின் தமது பலத்தைக் வெளிக் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − one =