சந்திக்கத் தயார்; ஆனால்.. நீ ஓடாதே

1

கோலாலம்பூர், ஆக. 17-
தங்கள் மீது புகார் செய்து வழக்குப் போடுவதாக மிரட்டும் ஸக்கீரை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோ, சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி ஆகியோர் கூறினர்.
ஸக்கீர் புகார் செய்த ஐவரில் ஒருவரான சதீஷ் பேசுகையில், ஸக்கீரை எதிர்கொள்ளத் தயார். அவரைப் போல் நாட்டை விட்டு ஓட மாட்டோம் என்று அவர் சொன்னார். இது ஒரு சுதந்திர நாடு. யாரும் புகார் செய்யலாம். காவல்துறை விசாரிக்கலாம். ஒருவேளை என் அறிக்கையில் குற்ற அம்சங்கள் இருந்தால் குற்றஞ்சாட்டலாம். ஆனால் நான் இந்தியாவுக்கோ வேறு நாட்டுக்கோ ஓடி விடமாட்டேன். பிரதமர் மோடியின் பின்னாலோ மற்றவர்களின் பின்னாலோ ஒளிந்து கொள்ளமாட்டேன்.
ஸக்கீர் என்ன பேசினார்? எப்படிப் பேசினார் என்பது வெட்ட வெளிச்சமானது.
வீடியோ காணொளியில் இருக்கிறது. புகார் செய்திருக்கிறார் பார்ப்போம், அவரை நாங்கள் அவமதித்தோமா தவறாகச் சொன்னோமா என்பதை…என்றார் அவர்.
சார்ல்ஸ் சந்தியாகோ பேசுகையில் இவரது புகாரைக் கண்டெல்லாம் நாங்கள் அஞ்சவில்லை.

சந்திக்கத் தயார். காவல்துறை விசாரிக்கட்டும். அவரை நான் தவறாகக் குறிப்பிடவில்லை என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன். நான் ஒரு மலேசியப் பிரஜை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி. மக்கள் நலனுக்காகவும் நாட்டின் இன ஒற்றுமைக்காகவும் நாட்டின் தேசிய பாதுகாப்பை தற்காத்து போராடும் கடமை எனக்கு இருக்கிறது என்றார் அவர்.
துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி பேசுகையில், எத்தனை புகார் வேண்டுமானாலும் அவர் செய்யட்டும். முடிந்தால் என்மீது வழக்குப் போடட்டும். நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயார். காவல்துறை என்னை விசாரிப்பதை வரவேற்கிறேன். அதேபோல் ஸக்கீருக்கு எதிரான அத்தனை புகார்களையும் விசாரிக்க வேண்டும். ஸக்கீரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றார் ராமசாமி.

1 COMMENT

  1. நம் மலேசியத் தமிழர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று சாக்கிர் நாய் நினைக்கிறது. கடைசியில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடப்போவது யார் என்று பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 18 =