சத்து நிறைந்த ராகி அவல் புட்டு

தேவையான பொருட்கள்

ராகி அவல் – 1 கப்

தூளாக்கிய வெல்லம் – 1 கப்
முந்திரி பருப்பு – 5 (நறுக்கிக்கொள்ளவும்)
தேங்காய் துருவல் – கால் கப்
ஏலக்காய் – 3 (தூளாக்கவும்)

ராகி அவல் புட்டு

செய்முறை:

ராகி அவலை கொதிக்கும் நீரில் கொட்டி ஐந்து நிமிடம் ஊறவைத்து நன்றாக பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு அதனை இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும்.

அகன்ற தட்டில் வேகவைத்த ராகி அவலை கொட்டி அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

அவை மீது முந்திரி பருப்பை தூவி பரிமாறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + 16 =