சத்தான ஃப்ரூட் லாலிபாப் சாலட்

குழந்தைகளுக்கு பழங்களை சாப்பிட கொடுத்தால் சாப்பிட மறுப்பார்கள். இந்த முறையில் பழங்களை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்
ஸ்டார் ஃப்ரூட் – 2,
மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு – தலா 1 சிட்டிகை,
கருப்பு திராட்சை, லாலிபாப் குச்சிகள்.

செய்முறை

  • ஸ்டார் ஃப்ரூட்டின் விளிம்பை மட்டும் பீட்டரில் சீவி விடவும்.
  • மேல்புறம், கீழ்புறம் நறுக்கவும். பிறகு வட்ட வட்டமாக நறுக்கினால் இயற்கையாகவே ஸ்டார் வடிவம் கிடைக்கும்.
  • மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு கலந்து நறுக்கிய பழத்தில் தூவவும்.
  • லாலிபாப் குச்சியில் முதலில் கருப்பு திராட்சை, ஸ்டார் பழம், மீண்டும் திராட்சை, ஸ்டார் பழம் என குத்தி அலங்கரித்து பரிமாறவும்.
  • விரும்பினால் கருப்பு திராட்சைக்கு பதில் பச்சை திராட்சை, செர்ரி குத்தி பரிமாறலாம்.
  • அந்ததந்த சீசனில் கிடைக்கும் பழங்களை வைத்தும் இந்த ரெசிபியை செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 3 =