சட்ட விரோத சிமென்ட் கலவை தயாரிப்பு தொழிற்சாலை நடவடிக்கை முறியடிப்பு

இங்கு, தெலுக் பங்ளிமா காராங் வட்டாரத்தில் எந்தவித அனுமதியும் பெறாமல் சட்ட விரோதமாக நடத்தி வந்த சிமென்ட் கலவை தயாரிப்பு தொழிற்சாலையின் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டது.
கடந்த வெள்ளியன்று கோலாலங்காட் மாவட்ட மன்ற அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் அத் தொழிற்சாலை செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அப்பகுதியில் பயன்பாட்டில் இருந்த மின்சாரம் மற்றும் குடிநீரை சம்பந்தப்பட்ட வாரிய பணியாளர்கள் நேரில் வந்து துண்டித்தனர். 1974ஆம் ஆண்டு சட்டம் 133, பிரிவு 70 (13) (சி) இன் கீழ் அத்தொழிற்சாலையை நடத்தி வந்தவரிடம் அமலாக்க அதிகாரிகள் சம்மன் வழங்கினர்.
மேலும், நிலத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்ததோடு சுற்றுச்சூழலுக்கு பாதகத்தை விளைவிக்கும் வகையில் அமைந்திருந்த அத்தொழிற்சாலையின் நடவடிக்கைக்காக பந்திங் போலீஸார் அந்நபரிடம் சம்மனை வழங்கி எச்சரித்துவிட்டுச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 14 =