சட்ட விரோதக் குடியேறிகளைக் குறைக்க ஒட்டு மொத்த நடவடிக்கை

0

நாட்டில் மோசமடைந்து வரும் சட்ட விரோதக் குடியேறிகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் ஒட்டு மொத்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக உள்துறை அமைச்சர் முஹிடின் யாசின் நேற்று மேற்கோள் காட்டினார்.

ஆட்சி முறையையும், அமலாக்க நடவடிக்கை முறைமையையும் செம்மைப்படுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட கால வரம்பில் சட்ட விரோதக் குடியேறிகள் யாரும் இல்லாத நிலையை நாட்டில் ஏற்படுத்துவதை அந்த ஒட்டுமொத்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக பல்வேறு அமைச்சுகள், தொடர்புடைய நிறுவனங்கள், சட்ட திட்டங்கள் ஆகியன உட்படுத்தப்படும்.

ஆக்கப்பூர்வமான அமலாக்க நடவடிக்கை இல்லாமல் போகும் நிலையில் இவர்களின் பிரவேசத்தால் நாட்டில் பல்வேறு சமூக மற்றும் சட்டப் பிரச்சினைகள் உருவாகுவதை முஹிடின் சுட்டிக் காட்டினார். இவ்வாண்டில் அவர்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமான பயனைத் தந்துள்ளது. இந்நடவடிக்கைகள் அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தொடரப்படும். இந்நடவடிக்கையில் மாநில அரசாங்கங்கள், ஊராட்சி அதிகாரிகள், கிராம சமுதாய நிர்வாக மன்றங்கள், கிராம மேம்பாட்டு மற்றும் பாதுகாப்பு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சட்ட விரோதக் குடியேறிகள் நாட்டுக்குள் நடமாடத் தடையாக அமையும் அனுகூலமற்ற சூழ்நிலைகளை உருவாக்குவது இந்நடவடிக்கைகளின் நோக்கமாகும். அமலாக்க நடவடிக்கைகள், சட்ட நடவடிக்கைகள், எல்லை பாதுகாப்பு, நாட்டின் நுழைவாசல் பாதுகாப்பு, அந்நிய நாட்டவர் நிர்வாகம், ஊடகம், விளம்பரம் ஆகிய அம்சங்களை இந்த நடவடிக்கைகள் கொண்டிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =