சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது..!

0

இந்துக்களை இழிவுபடுத்திப் பேசியுள்ள சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸம்ரி வினோத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என சட்டத்துறை அலுவலகம் தெளிவுபடுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக இனிமேல் எவ்வித நடவடிக்கையும் இல்லை என இந்து ஆகம அணிக்கு வழங்கிய கடிதம் ஒன்றில் சட்டத்துறை அலுவலகம் தெரிவித்தது.
கடந்த ஜூலை 5ஆம் தேதி அரசு தரப்பு வழக்கறிஞர் முகமட் ஹனாபியா ஸக்காரியா கையெழுத்திட்ட கடிதம், இந்து ஆகம அணியின் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.
இது சட்டத்துறை தலைவரின் முடிவாகும். இனி இந்த விவகாரத்தில் விசாரணை எதுவும் இல்லை என ஹனாபியா ஸக்காரியா இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தின் இந்த முடிவு ஏமாற்றத்தைத் தருவதாக இந்து ஆகம அணியின் தலைவர் அருண் துரைசாமி கூறினார்.
ஸம்ரி வினோத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டும் நடவடிக்கை இல்லை என்ற முடிவு ஏமாற்றத்தைத் தருவதாக அவர் சொன்னார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here