சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற அந்நியர்கள் கைது

0
x-default

சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேற முயன்ற குற்றத்திற்காக 14 சட்டவிரோத குடியேறிகளை மலேசிய கடற்படையின் அமலாக்க அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கைது செய்தனர்.
இங்குள்ள டெசாருவிலுள்ள நீர் மற்றும் ஆகாய விளையாட்டின் ராக்கான் மூடா கொம்ப்ளெக்ஸிற்கு அருகிலுள்ள கடற்கரையில் இருந்து நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது இந்த சட்டவிரோத தொழிலாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் இயக்குநர் கேப்டன் மாரிடிம் முகம்மது ஸுல் ஃபாட்லி நயான் கூறினார். 21 வயது முதல் 48 வயது வரையிலான இந்த சட்டவிரோத குடியேறிகள் அனைவரும் படகுக்காக காத்திருந்தபோது கைது செய்யப்பட்டனர். அமலாக்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடற்கரையில் இருப்பதைக் கண்டு சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றவிருந்த இடைத்தரகர்கள் தப்பித்து ஓடி விட்டனர் என்று நம்பப்படுகிறது.
சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற குற்றத்திற்காக குடிநுழைவுத் துறை சட்டம் 1959/63இன் கீழ் இந்த சட்டவிரோத தொழிலாளர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சந்தேக நபர்களுக்கு அதிகபட்சம் 10,000 வெள்ளி அபராதம் அல்லது 5 ஆண்டுகளுக்கும் மேற் போகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
இது போன்ற நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்ற முகம்மது ஸுல் ஸபாட்லி, சட்டவிரோத வழிகளால் அந்நிய குடியேறிகள் வெளியாகுவது குறித்த விபரம் அறிந்தவர்கள் குடிநுழைவுத் துறைக்கு தகவல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 1 =