சட்டத்தைப் பற்றி ஸாஹிட்டிற்கு பாடம் நடத்தினார் அம்பிகா

0

சட்டம் எவ்வாறு செயல்படும் என்பது பற்றி வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா சீனிவாசன் அம்னோ தலைவர் ஸாஹிட்டுக்கு நேற்று பாடம் நடத்தினார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் இளம் பெண் ஒருவர் 8 சைக்கிள் ஓட்டிகளை கொன்றதாகக் கூறப்படும் ஒரு வாகனமோட்டியை நீதிமன்றம் விடுதலை செய்தது தொடர்பாக ஸாஹிட் புதன்கிழமை தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் பிரசார கருத்துரைத்தலில் தொடர்ந்து இப்பாடம் நடத்தும் சம்பவம் நிகழ்ந்தது. புது மலேசியாவில் சட்டத்திற்குத்தான் மதிப்பும் மரியாதையும் அளிக்கப்படுகிறது. இனத்திற்கு அல்ல, சட்டங்களும் தகவல்களும் தான் முக்கியம்.
’நீங்கள் யார் என்பது முக்கியமல்ல, இக்கோட்பாடு புதிய மலேசியாவை மேலும் பலப்படுத்தும் முந்தைய அரசாங்கத்திற்கு இது போன்ற கோட்பாடு அந்நியம்தான். ஸாஹிட் முந்தைய அரசாங்கத்தின் ஒரு பகுதியாகும் என்று அம்பிகா சுட்டிக் காட்டினார்.
8 இளம் சைக்கிளோட்டிகளைக் கொன்றதாகக் கூறப்படும் ’சாம் கே திங் என்ற காரோட்டியை விடுதலை செய்ததற்காக நீதிபதி சித்தி ஹஜார் அலியை ஸாஹிட் குறை கூறினார். அந்நீதிபதியின் தீர்ப்பு தொடர்பாக வலைத்தளங்களில் நிறைய விமர்சனங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலும் அந்த கரோட்டியின் இனத்தைப் பற்றியதாக இருந்தது. நீதிபதி சித்தி ஹஜாரை தற்காத்துப் பேசினார் அம்பிகா. சட்டம் வழக்கின் தகவல்களின் அடிப்படையில் அவர் தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
இனம்,உணர்ச்சி, பயம் போன்றவைகளால் அவர் ஈர்க்கப்படவில்லை.
இன அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நாம் முதலில் ஒழிக்க வேண்டும்.
வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பில் மனநிறைவு கொள்ளாத அரசு தரப்பினர் மேல் முறையீடு செய்யலாம்.
’சட்டத்தைப் பலப்படுத்துவதன் மூலம் நாம் அந்நிய முதலீடுகளை அதிகரிக்கலாம். இதனைப் புரிந்து கொள்ளாத அரசியல் வாதிகளால் நாட்டிற்கு கேடு விளையும் என அவர் எச்சரித்தார்.
கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி போதிய ஆதாரங்களை அரசு தரப்பினர் வழங்கத் தவறியதால் சாம் கே திங்கை ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விடுதலை செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 4 =