சட்டத்துறைத் தலைவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள அதிகாரி ஒருவருடன் ஓர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் 2 வாரங்களுக்கு தமது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
பரிசோதனையில் தமக்கு கோவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட போதும், தாம் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக இட்ருஸ் மலேசியா கினியிடம் தெரிவித்தார்.
1988ஆம் ஆண்டு தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின் 15ஆவது பிரிவிற்கேற்ப 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் சொன்னார்.
அந்தக் கூட்டத்தில் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், சட்டத்துறை அலுவலகம், தேசிய கணக்காய்வு இலாகா ஆகியவற்றைச் சேர்ந்த உயர்நிலை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் 14 நாட்களுக்கு தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 2 =