சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் பதவி விலகினார்

0

சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் பதவி விலகும் கடிதத்தை இடைக்காலப் பிரதமர் துன் மகாதீரிடம் சமர்ப்பித்திருப்பதாகத் தெரிகிறது.

மலேசியாகினி அவரைத் தொடர்பு கொண்டபோது, அதனை அவர் உறுதிப்படுத்தினார். டாக்டர் மகாதீர் பதவியிலிருக்கும் போதே டோமி பதவி விலக முடிவெடுத்திருப்பதாக தி எட்ஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஈராண்டு தவணையில் அப்பதவியில் அவரை மகாதீர் 2018 ஜூன் 4ஆம் தேதி நியமித்தார். அவர் பதவி விலகிய பின்னர், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்டுள்ள 1எம்டிபி நிதி மோசடி வழக்குகளின் நிலை என்னவாகும் என்பது புரியவில்லை என அது குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 15 =