கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற ராஜகோபாலனுக்கு பாராட்டு

மாசாய் இந்திய சமூக நல மேம்பாட்டுக் கழகத்தின் (மீவா) மெர்டேக்கா கதம்ப மாலை பல்வேறு நிகழ்வுகளுடன் கழகத்தின் சேவை மையத்தில் அதன் தலைவர் டத்தோ டாக்டர் கே. புருஷோத்தமன் தலைமை யில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சமுதாயத் திற்கு சிறந்த சமூக சேவை வழங்கியமைக்காக அண்மை யில் இந்தியாவின் ராயல் பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்ட கோத்தா திங்கி, தாமான் சௌஜானா இந்தியர் சமூக நல மன்றத்தின் தலைவர் இராஜகோபாலன் வீரன் சிறப்பு செய்யப்பட்டார்.
மீவாவின் தலைவர் டத்தோ டாக்டர் கே. புருஷோத்தமன், இராஜகோபாலன் சமூகத்திற்கு வழங்கி வரும் பங்களிப்பை பாராட்டி அவருக்கு பொன் னாடை போர்த்தி மாலை அணி வித்து சிறப்பு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + thirteen =