கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர் பூரண சுகம்

0

கோவிட்-19 என்ற நச்சு உயிரியின் தாக்கம் காணப்பட்ட மலேசியர், பூரண சுகமடைந்து சுங்கைபூலோ மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமது நேற்று அறிவித்துள்ளார்.

41 வயது நிரம்பிய அவர் சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் காய்ச்சல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அந்த மருத்துவமனைக்குச் சென்றார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கோவிட்-19 உயிரி அவரின் இரத்தத்தில் கலந்திருப்பதை உறுதி செய்து, சிகிச்சைக்காக அங்கே தங்க வைத்தனர்.

நேற்றைய செய்தி நேரம் வரை நாட்டில் புதிய கோவிட்-19 நோயாளி அடையாளம் காணப்படவில்லை. இது வரைக்கும் மொத்தம் 13 பேர் இக்காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கெனவே இதனால் பாதிக்கப்பட்ட 22 பேரில் 9 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் 15 பேர் சீன நாட்டவர்; அறுவர் மலேசியர், ஒருவர் அமெரிக்கர்.

நாட்டின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக எழுந்துள்ள இக்காய்ச்சலைக் கையாள்வதற்கு சுகாதார அமைச்சு உலக சுகாதார அமைப்போடு அணுக்கமாக ஒத்துழைத்து வருகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + seven =