கோவிட் 19 விவகாரத்தை ஸுல்கிப்ளி ஆக்ககரமாகக் கையாண்டு வருகிறார்

0

தற்போது பரபரப்பாக இருந்து வரும் ‘கோவிட் 19’ என்ற கொரோனா வைரஸ் சம்பவத்தை சுகாதார அமைச்சர் ஸுல்கிப்ளி அமாட் ஆக்ககரமாகக் கையாண்டு வருவதாக வியூகப் பிரிவுத் தலைவர் ராய்ஸ் ஹுசேன் வெகுவாகப் பாராட்டினார்.

இந்த விவகாரத்தில் உள்ளூர் அரசியலில் சிக்கிக் கொள்ளாமல் தமது அமைச்சரவைப் பணிகளை செவ்வனே அந்த அமனா தலை வர் செய்து வருவதாக அவர் சொன்னார்.சுகாதார அமைச்சர் என்ற வகையில் அபாரமாக தமது கடமையை ஸுல்கிப்ளி செய்து வருகிறார் என அவர் சுட்டிக் காட்டினார்.

பக்காத்தான் அமைச்சரவையில் சில அமைச்சர்கள் பிரதமரைப் பாராட்டுவதில்தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். தங்களுடைய அமைச்சரவை பணிகளை விட அரசியலில்தான் அதிக கவனம் செலுத்தி வருகின்ற னர் என்றார் அவர்.ஆனால் இவர்களுக்கு மாறாக ஸுல்கிப்ளி தமது அமைச்சர் பணிகளில் முழுமையான கவனத்தைச் செலுத்தி வருகிறார் என அவர் தெரிவித்தார்.

குறிப்பாக பிரதமர் துன் மகாதீர் மற்றும் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோருக்கிடையிலான அதிகாரமாற்ற விவகாரத்தில் சில பக்காத்தான் ஹராப்பான் அமைச்சர்கள் தீவிர கவனத்தைச் செலுத்தி வருவதாக ராய்ஸ் தெரிவித்தார்.மக்களுக்கும் நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை சந்திப்பதிலும்தான் அமைச்சர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − eighteen =