கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 147 பேருக்கு அபராதம்

பினாங்கு,வட கிழக்கு காவல் துறை,பினாங்கு மாநகர் மன்றம், மாநில காவல் துறை தலைமையகம் ஆகியவை கடந்த செப்.15 முதல் 19 வரை கோவிட்-19 தொற்று நோய் தொடர்பான எஸ்.ஓ.பி தனை மக்கள் கடைப்பிடிக்கின்றனரா என்பதை பரிசோதனை செய்ததில் 147 பேர் மீது பல்வேறு விதி முறைகளை மீறிய குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டது.
சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்காதவர்கள், தங்களின் பெயரை பதிவு புத்தகத்தில் பதியாதவர்கள் மற்றும் பிற குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டதாக வட கிழக்கு மாவட்ட காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இதனுடன் பினாங்கு மாநகர் மன்ற அதிகாரிகள் 5 வியாபார கடைகளை சோதனை செய்ததில் எஸ்.ஓ.பியை மீறிய குற்றத்துக்காக 5 வியாபாரத் தளங்களை 7 நாட்களுக்கு மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விதிமுறை எண் 8, 2020 எனும் சட்ட விதியை மீறிய குற்றத்துக்காக மது விற்பனை மற்றும் கேளிக்கை மையங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − nine =