கோவிட்-19 பொருளாதாரத் தாக்கத்தை பக்காத்தான் பிளஸ் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்

தற்போது நாட்டில் திடீர் தேர்தல் நடத்தப்பட்டால் கோவிட்-19 தாக்கத்தால் பாதிப்படைந்த பொருளாதார நிலைமை, நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு தொடர்பான விவகாரங் களை எதிர்க்கட்சியான பக்காத்தான் பிளஸ் தேர்தல் பிரசாரத்தின் போது தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எனினும் இவ்விவகாரங்களை பக்காத்தான் பிளஸ் தவறுதலாகப் பயன்படுத்தினால் ஆபத்துகளையும் இடர்பாடுகளையும் அவர்கள் சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
சுதந்திரமான அரசியல் ஆய்வாளர் ஹோ கி பிங் கூறுகையில், பக்காத்தான் பிளஸ் வணிகர்களின் குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர பிரிவினரின் ஆதரவைத் திரட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
காரணம் இவர்கள்தான் கோவிட்-19 தாக்கத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இதன் மூலம் சுமார் 50,000 சிறு மற்றும் நடுத்தர
வணிகர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் அல்லது அவர்களின் தொழில்கள் மூடுவிழா கண்டிருக்கின்றன.
எனினும் கோவிட்-19 தாக்கத்தால் பொருளாதாரத் தாக்கத்தை ஆளும் பெரிக்காத் தான் நேஷனல் அணியினரும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார் அவர்.
சுமார் ஒரு மில்லியன் வேலைகள் ஆபத்தான நிலையில் தற்போது இருக்கின்றன. இந்நிலையை எந்தக் கட்சியும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனால்தான் பெரிக்காத்தான் நேஷனல் பொருளாதாரத்தை மேம்படுத்தி தனது நிலையைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.
வேலைக்கு ஆள்சேர்க்கும் பெரிய ஆன்லைன் நிறுவனமான ‘ஜாப் ஸ்திரீட்’
அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் பத்தில் ஒன்பது மலேசிய ஊழியர்கள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே அதிகமான வாக்காளர்கள் எதிர்காலத்தில் பொருளாதார மீட்சிக்குரிய கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்பது தெரியவரும்.
ஹோவின் கருத்திற்கு ஒத்த கருத்துகளை சிங்கப் பூரின் அனைத்துலக விவகாரங் களுக்கான கழகத்தின் மூத்த கல்விமான் ஓ இ சுன்னும் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − one =