கோவிட்-19 நோயின் தாக்கத்தை எதிர்கொள்ள ரிம. 2,000 கோடி ஒதுக்கீடு

0

உலகை ஆட்டிப் படைத்துவரும் கோவிட்-19 நோயின் தாக்கத்தை எதிர்கொள்ள ஊக்குவிப்புத் திட்டத்தை இடைக்காலப் பிரதமர் துன் மகாதீர் நேற்று அறிவித்தார்.

அந்த நோயினால் இதுவரை 82,000 பேர் பாதிக்கப்பட்டு 2,800 பேர் உயிரிழந்துள்ளனர். டாக்டர் மகாதீர் அறிவித்த ஊக்குவிப்புத் திட்டத்தில், வருமானம் குறைந்த வாடகைக்கார் ஓட்டுநர் கள், சுற்றுலாப் பேருந்து ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், பதிவு பெற்ற ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு ஒரே தவணை உதவியாக 600 ரிங்கிட் வழங்கப்படும்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மருத்துவ அதிகாரிகள் ஆகி யோருக்கு மாதாந்திர அலவன்சாக 400 ரிங்கிட்டும் , 2020 பிப்ரவரியில் இருந்து நோய் முற்றாக ஒழிக்கப்படும் வரை குடிநுழைவு அதிகாரிகளுக்கு மாதமொன்றுக்கு 200 ரிங்கிட்டும் வழங்கப்படும்.

2020 மே மாதம் வழங்கப்படும் வாழ்க்கைச் செலவின உதவித் தொகை 2020 மார்ச் மாதத்திலேயே வழங்கப்படும். மேலும் அந்த உதவித் தொகையைப் பெறுவோருக்கு இ-வாலட்டின் உதவித் தொகையை அடுத்து, கூடுதலாக 50 ரிங்கிட் வழங்கப்படும். உள்ளூர் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டிருப்போருக்கு வருமான வரி விலக்காக 1,000 ரிங்கிட் கழிவு தரப்படும். உள்ளூர் விமானப் பயணங்கள், ரயில் மற்றும் ஹோட்டல் துறைகளில் டிஜிட்டல் முறையிலான சேவையில் ஈடுபட்டிருப்போருக்கு 100 வெள்ளிக்கான பற்றுச்சீட்டு வழங்கப்படும்.

தொழிலாளர் சேமநிதி வாரியத்திற்கு தொழிலாளர்கள் செலுத்தும் சந்தா தொகை 11 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடு குறைக்கப்பட்டு, 7 விழுக்காடு மட்டுமே செலுத்தப்பட அனுமதிக் கப்படுகிறது. அச்சலுகையானது ஏப்ரல் 1லிருந்து டிசம்பர் 31 வரை நடப்புக்கு வரும். இதன் மூலம் 1,000 கோடி ரிங்கிட்டை பொதுமக்கள் செலவிட முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − four =