கோவிட்-19 நோயின் அபாயம் ஐஐயுஎம்மின் வகுப்புகள் ரத்து

0

கோவிட்-19 வைரஸ் பரவும் அபாயத்தின் எதிரொலியாக அனைத்துலக இஸ்லாமிய பல் கலைக்கழகத்தின் வகுப்புகள் யாவும் நேற்றிலிருந்து ரத்து செய்யப் பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் நடவடிக்கைகள் யாவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகத் தலைவர் ஸுல் கிஃப்லி அப்துல் ரசாக் தெரிவித் தார். சீன மாணவர்களையும் சீனாவிலிருந்து திரும்பி இருப்பவர் களையும் கண்காணிக்க அங்கு இரு பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம், மலாயா பல்கலைக்கழகம் நேருக்கு நேர் நடத்தும் வகுப்புகளை பிப்ரவரி 17 இல் இருந்து ஒரு வாரத்துக்கு ரத்து செய்துள்ளதாக அறிவித்திருந்தது. மேலும், மாணவர் பதிவினையும் அது ஒத்தி வைத்துள்ளது.

நேற்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அமாட், நாட்டில் கோவிட்-19 நோயின் தாக்கம் கட்டுப்பாட்டில் இருப்ப தாகத் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + fifteen =