கோவிட்-19 நோயாளியும் சபா சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க உரிமையுள்ளது

வரும் சனிக்கிழமை 26ஆம் தேதி சபா சட்டமன்றத்திற்கான வாக்களிப்பு நடைபெறுகிறது.
73 தொகுதிகளுக்கு கடுமையான போட்டி நிலவினாலும், டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் தலைமையிலான பக்காத்தான் பிளஸ் கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறது.
சபாவைச் சேர்ந்த வாக்காளர்கள் இத்தேர்தலில் தங்களது கடமையை நிறைவேற்ற கண்டிப்பாக வாக்களிக்க வரும்படி ஷாபி அப்டால் கேட்டுக் கொண்டார். கோவிட்-19 தொற்று கண்டவர்களுக்கும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முழு உரிமை இருக்கிறது.
நோயாளி என்று காரணம் கூறி இவர்களை வாக்களிக்க விடாமல் தடுத்து வைக்க முடியாது.
அஞ்சல் வாக்கு மூலமாக இவர்கள் தங்கள் வாக்கைச் செலுத்த எல்லா உரிமைகளும் இருப்பதாக அவர் சொன்னார்.
இதனிடையே இன்னும் சில தினங்கள் இருப்பதால் சபா சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு ஆதரவாக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையில் அமைச்சர்களும் பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக டத்தோஸ்ரீ அன்வாரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − fourteen =